காஞ்சீபுரம் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு


காஞ்சீபுரம் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 15 April 2021 9:22 AM IST (Updated: 15 April 2021 9:22 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை திருடப்பட்டது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம், சித்தேரி மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் துரையரசன் (வயது 38). ரெயில்வேயில் சிக்னல் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று காலை துரையரசன் எழுந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காஞ்சீபுரத்தில் இருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story