சங்கராபுரத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி


சங்கராபுரத்தில்  பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 15 April 2021 9:42 PM IST (Updated: 15 April 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

சங்கராபுரம்

கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி மும்பை துறைமுகத்தில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 66 வீரர்கள் உயிர்நீத்தனர்.  இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்கள் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான தீயணைப்பு வீரர்கள் நினைவு தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையில் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story