உடுமலை அருகே தண்ணீர் நிறைந்து ரம்யமாக காட்சியளிக்கும் ஒட்டுக்குளத்தில் வெள்ளை தாமரை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

உடுமலை அருகே தண்ணீர் நிறைந்து ரம்யமாக காட்சியளிக்கும் ஒட்டுக்குளத்தில் வெள்ளை தாமரை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
x
தினத்தந்தி 15 April 2021 9:45 PM IST (Updated: 15 April 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே தண்ணீர் நிறைந்து ரம்யமாக காட்சியளிக்கும் ஒட்டுக்குளத்தில் வெள்ளை தாமரை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

உடுமலை
உடுமலை அருகே தண்ணீர் நிறைந்து ரம்யமாக காட்சியளிக்கும் ஒட்டுக்குளத்தில் வெள்ளை தாமரை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
தாமரை பூக்கள்
உடுமலை அருகே உள்ளது ஒட்டுக்குளம். இந்த குளத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து தளி கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தற்போது இந்த குளத்தில் தண்ணீர் அதிக அளவு உள்ளது. இதை இந்த பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குளத்தின் மேற்கு பகுதியில் தாமரை பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இந்தியாவின் தேசிய மலர் தாமரை. தாமரையை தூய்மையின் அடையாளமாக கருதுகின்றனர். ஏனெனில் தாமரை, சேறு நிறைந்த, அழுக்கான தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் பூக்கள் அழுக்கு படியாமல் தூய்மையாக இருக்கின்றன. தாமரை மலர் தன்னைத்தானே தூய்மைபடுத்திக்கொள்கிறது என்று கூறுவார்கள்.
ஒட்டுக்குளத்தில்
தாமரை மலர் கடவுள் லட்சுமியின் இருக்கையாக கருதப்படுகிறது. லட்சுமி, செல்வ வளத்தைக்குறிக்க இரண்டு கைகளிலும் தாமரையை ஏந்தி இருப்பது, வெள்ளை தாமரையில் சரஸ்வதி வீற்றிருப்பதாக கூறப்படுவது போன்றவை தாமரை மலருக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். இதேபோன்று பல தேவதைகளின் கைகளிலும் தாமரை இடம் பெற்றிருக்கும். தாமரை மலரை ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார்கள். இவ்வளவு சிறப்பு மிக்க தாமரை மலர்களில் வெள்ளை தாமரை மலர்கள் உடுமலை அருகே உள்ள ஒட்டுக்குளத்தில் நிறைந்துள்ளன. காலையில் சூரிய ஒளி வரத்தொடங்கியதும் இந்த தாமரை மலர்கள் மலரத்தொடங்குகின்றன. காலையில் தாமரை மலர்கள் பூத்துக்குலுங்குவது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது.
மேக கூட்டங்கள்
இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்தது. அப்போது ஒட்டுக்குளத்தில் உள்ள தண்ணீர், குளத்தில் நீந்தும் நீர்க்கோழிகள், இரை தேடும் கொக்குகள், கரையில் பச்சைபசேலென்று இருந்த மரங்கள் ஆகியவை அருகில் உள்ளது போன்று தெரிந்த மேக கூட்டங்கள், அதையடுத்து தெரிந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றை ஒன்றிணைந்திருந்த நிலையில் பார்க்கும்போது அந்த குளம் பகுதி ரம்யமாக கண்களுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது.

Next Story