தியாகதுருகத்தில் முக கவசம் அணியாத 34 பேருக்கு அபராதம்


தியாகதுருகத்தில் முக கவசம் அணியாத 34 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 15 April 2021 4:23 PM GMT (Updated: 15 April 2021 4:23 PM GMT)

தியாகதுருகத்தில் முக கவசம் அணியாத 34 பேருக்கு அபராதம்

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் கொளஞ்சியப்பன், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ், குடிநீர் திட்ட பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தியாகதுருகம் கடைவீதி, பஸ் நிலையம் மற்றும் திருக்கோவிலூர் சாலை ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது முககவசம் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள், மளிகை கடை, காய்கறி கடை, உணவகங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 34 பேருக்கு அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.6,700 வசூலித்தனர். பின்னர் அவர்களிடம் கொரோனா தொற்று பரவலை தடுக்க முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story