பொங்கலூர் அருகே வாவிபாளையத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்தனர்.
பொங்கலூர் அருகே வாவிபாளையத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்தனர்.
பொங்கலூர்
பொங்கலூர் அருகே வாவிபாளையத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்தனர்.
உயர் அழுத்த மின்கோபுரம்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வழியாக மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனத்தின் சார்பில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த உயர் அழுத்த மின் கோபுரம் விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பொங்கலூரை அடுத்த வாவிபாளையம் பகுதியில் மொத்தம் 21 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க கணக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்குவதாக இருந்தது. இதில் 7 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கான இழப்பீட்டு தொகையும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தங்களுக்கு எந்தவித இழப்பீட்டுத்தொகையும் வரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பொதுமக்கள் முற்றுகை
இந்த நிலையில் வாவிபாளையம் பகுதியில் நேற்று உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க பொக்லைன் எந்திரத்துடன் பவர்கிரீட் நிறுவனத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக திருப்பூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், கிருஷ்ணசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீராமச்சந்திரன், வின்சென்ட் மற்றும் திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதுபற்றி அறிந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க வந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பவர் கிரீட் நிறுவன அதிகாரிகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகளிடம் திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அப்போது விவசாயிகள், உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதற்கான விசாரணை நாளை வருகிறது. அது வரையில் நீங்கள் பணியை இங்கு தொடங்க கூடாது. அதற்கான கால அவகாசத்தை தர வேண்டும் என்றனர்.
அதற்கு அதிகாரிகள் வழக்கு தொடுத்துள்ளவிவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணி தொடங்க அனுமதி பெறலாம் என்று கேட்டனர். ஆனால் அதற்கு விவசாயிகள், உடனடியாக அனைவரையும் இப்போதும் கூட்டி வருவது சிரமம் என தெரிவித்தனர்.
பணிகள் ஒத்திவைப்பு
இதனைத் தொடர்ந்து இந்த இடத்தில் பணியை தொடங்குவதை நாளை வரை ஒத்திவைக்கலாம். மீதம் உள்ள இடத்தில் பணியை தொடங்கலாமா என கேட்டனர். அங்கு அளவீடு செய்து, எவ்வளவு இழப்பீடு வழங்குகிறீர்கள் என்பது குறித்து எங்களுக்கு தெரிவித்தால் அந்த இடத்தில் நீங்கள் பணியைத் தொடங்குவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வாவிப்பாளையத்தில் பணி தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தில் பொங்கலூர் ஒன்றியக்குழு தலைவர் வக்கீல் குமார், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், வாவிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள்உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story