கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி


கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி
x
தினத்தந்தி 15 April 2021 4:56 PM GMT (Updated: 15 April 2021 4:56 PM GMT)

கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள வன்னிவயலை சேர்ந்தவர் ராமன் என்ப வரின் மகன் வாசிம்கான் (வயது40). இவரின் மனைவி கதிஜாபேகம். இவர் களுக்குள் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது அவர்களின் மகன் விலக்கி விட்டு சமதானபடுத்தி உள்ளார். ஆத் திரம் குறையாத கதிஜாபேகம் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து கணவன் என்றும் பாராமல் வாசிம்கானை சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த வாசிம்கான் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிஜாபேகத்தை தேடிவருகின்றனர்.

Next Story