ெரயில்வே மேம்பாலத்துக்கு அடியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்
தருப்பத்தூர் புதுப்பேட்டை ெரயில்வே மேம்பாலத்துக்கு அடியில் மழைநீர் குளம்போல தேங்கி உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திக்குள்ளாகின்றனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. அவ்வை நகர், ராஜீவ் காந்தி மைதானம், புதுப்பேட்டை, நாட்டறம்பள்ளி கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை இந்த மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக செல்கிறது. பல்வேறு கிராமங்களில் இருந்து அத்தியவசிய பொருட்கள் வாங்க, விற்க வேண்டும் என்றாலும் திருப்பத்தூர் நகருக்கு இந்த பகுதி வழியாகத்தான் வரவேண்டும்.
மேம்பாலம் மிகவும் தாழ்வாக உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கிகுளம் போல் காட்சியளிக்கும். இந்த நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக பாலத்துக்கு அடியில் குளம்போல் மழைநீர்தங்கியது.
நிரந்தர தீர்வு
மழைநீர் தேங்கும் சமயத்தில் மட்டும் நகராட்சி நிர்வாகம் மின்மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றுகின்றனர். பலமுறை நகராட்சியிடம் மேம்பாலத்தின்கீழ் தேங்கி நிற்கும் நீரை நிரந்தரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பாலத்தின் வழியாகத்தான் மாவட்ட கலெக்டர் குடியிருப்பு பகுதிக்கு செல்லவேண்டும் என்பதால் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் வைத்து உறிஞ்சி வெளியேற்றப்படுகிறது.
மேம்பாலத்தின் அடியில் குளம்போல் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வுகாணவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story