கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில்162 பேருக்கு கொரோனா


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில்162 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 April 2021 6:11 PM GMT (Updated: 15 April 2021 6:11 PM GMT)

ஒரே நாளில்162 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் இதே நாளில் கொரோனா நோயாளிகள் 40 பேர் சிகிச்சை பெற்று வந்தார்கள். அதே போல நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 162 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 616 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 914 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது.

Next Story