வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 16 April 2021 12:15 AM IST (Updated: 16 April 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

அம்பை:
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 ெபண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கணவன்-மனைவி தகராறு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ் மனைவி சங்கரி (வயது 32). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் மனமுடைந்த சங்கரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளஸ்-2 மாணவி

முக்கூடல் அருகே உள்ள கலியன்குளத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகள் மாரி செல்வி (18). பிளஸ்-2 மாணவி. இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் மாரி செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து உடனடியாக முக்கூடல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மற்றொரு சம்பவம்

பாளையங்கோட்டை அருகே உள்ள தெற்கு அரியகுளத்தை சேர்ந்த பண்டாரம் மகள் மதுபாலா (21). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட மதுபாலா சம்பவத்தன்று வீட்டில், பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மதுபாலா நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். 

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story