பாம்பு கடித்து பெண் சாவு


பாம்பு கடித்து பெண் சாவு
x
தினத்தந்தி 16 April 2021 12:42 AM IST (Updated: 16 April 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

கள்ளிக்குடி அருகே பாம்பு கடித்து பெண் இறந்தார்.

திருமங்கலம்,ஏப்.
கள்ளிக்குடி அருகே உள்ள வெள்ளாகுளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி சந்தனமாரி (வயது 39). விவசாய வேலை பார்த்து வரும் இவர் மாடு வளர்த்து வந்தார். மாடுகளுக்கு வைக்கோல் படப்பில் வைக்கோல் எடுக்கச் சென்றபோது அவரை பாம்பு கடித்தது. அலறி துடித்த அவருக்கு உடனே கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்தனர். பின்னர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story