மின்னல் தாக்கி 5 ஆடுகள் செத்தன
குன்னம் அருகே மின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் செத்தன.
குன்னம்:
விவசாயி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அசூர் கிராமம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). விவசாயி. இவர் 30 வெள்ளாடுகளை வைத்து மேய்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை குன்னம் பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ராமகிருஷ்ணன் அசூர் கிராமத்தின் எல்லைப் பகுதியான சித்தளிக்கு செல்லும் சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
ஆடுகள் செத்தன
அதில் 5 ஆடுகள் மட்டும் தனியாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் மின்னல் தாக்கியது. இதில் 5 ஆடுகளும் உடல் கருகி செத்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story