புதுக்கோட்டையில் ஆடிட்டர் வீட்டில் நகைகள் கொள்ளை


புதுக்கோட்டையில் ஆடிட்டர் வீட்டில் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 15 April 2021 7:19 PM GMT (Updated: 15 April 2021 7:19 PM GMT)

புதுக்கோட்டையில் ஆடிட்டர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருவப்பூர் சவுராஷ்டிரா பெரிய தெருவில் வசிப்பவர் ராமமூர்த்தி. இவர் நமணசமுத்திரத்தில் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூரணவள்ளி. இவர் புதுக்கோட்டை நகராட்சியில் நிதி ஆதார துறையின் ஆடிட்டராக பணி புரிந்து வருகிறார். இந்த தம்பதியினர் புதுக்கோட்டையில் உள்ள வீட்டை பூட்டி விட்டு கடந்த ஒரு மாதமாக நமணசமுத்திரம் கிராமத்தில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர்.  இந்தநிலையில் நேற்று திடீரென இங்குள்ள வீட்டுக்கு வந்த பூரணவள்ளி வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 91 பவுன் நகைகள் மற்றும் சுமார் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு பூரணவள்ளி தகவல் கொடுத்தார். இந்த கொள்ளை சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---


Next Story