ரேஷன் கடையில் புகுந்த பாம்பு


ரேஷன் கடையில் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 16 April 2021 2:44 AM IST (Updated: 16 April 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரேஷன் கடையில் புகுந்த பாம்பினை பிடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் புது தெரு பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் அரிசி மூடையை நகர்த்தியபோது பெரிய பாம்பு ஒன்று சாக்கு மூடைக்குள் இருந்தது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூடைக்குள் இருந்த பாம்பினை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பினை வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். 

Next Story