கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது


கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 16 April 2021 3:51 AM IST (Updated: 16 April 2021 3:51 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 863 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பகுதிகள் நகர் நல மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் வரை 96 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று மட்டும் 5 ஆயிரத்து 993 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 863 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Next Story