தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 16 April 2021 6:18 PM IST (Updated: 16 April 2021 6:18 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி (ஏப்ரல் 25) மற்றும் மே தினம் (மே 1) முன்னிட்டு அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமத்தலங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.
மேற்குறிப்பிட்ட 2 நாட்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story