திண்டுக்கல் அருகே 4 பெண் குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை


திண்டுக்கல் அருகே 4 பெண் குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 April 2021 7:56 PM IST (Updated: 16 April 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே 4 பெண் குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 32) கூலித்தொழிலாளி. இவருக்கு ஷோபனா என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். சிவசங்கருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், ஷோபனா கோபித்து கொண்டு, குழந்தைகளுடனும் பக்கத்து தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து தனது வீட்டிற்கு வருமாறு ஷோபனாவை அவர் அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த சிவசங்கர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிவசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story