சாலை ஓரத்தில் உருவான திடீர் அருவிகள்
குன்னூரில் தொடர் மழை காரணமாக சாலை ஓரத்தில் திடீர் அருவிகள் உருவாகி உள்ளன. இதனை பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
குன்னூர்
குன்னூரில் தொடர் மழை காரணமாக சாலை ஓரத்தில் திடீர் அருவிகள் உருவாகி உள்ளன. இதனை பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
சாலையோர அருவிகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஆங்காங்கே அருவிகள் உள்ளன. மழை பெய்யும்போது இந்த அருவிகளில் தண்ணீர் கொட்டும்.
அதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். கடந்த ஒரு மாதமாக மழை இல்லாததால் இந்த அருவிகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோனது.
இந்த நிலையில் தற்போது குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. அத்துடன் திடீர் அருவிகளும் உருவாகி உள்ளது.
இதனை பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
தண்ணீர் கொட்டுகிறது
இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அருவியின் அருகே சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.
அத்துடன் சிலர் அருவியின் ஆபத்தான பகுதிக்கு சென்று செல்பி எடுத்து விளையாடுகிறார்கள்.
இதனால் ஆபத்தான இடங்களுக்கு செல்லக்கூடாது என்று வனத்துறை அறிவித்து உள்ளனர். இருந்தபோதிலும் தடையை மீறி சிலர் அங்கு செல்வதால் வனத்துறையினர் ரோந்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story