செம்பனார்கோவில் அருகே, நள்ளிரவில் வீட்டின் தகவை தட்டிய வாலிபரை அரிவாளால் வெட்டிய சிறுவன் கைது


செம்பனார்கோவில் அருகே, நள்ளிரவில் வீட்டின் தகவை தட்டிய வாலிபரை அரிவாளால் வெட்டிய சிறுவன் கைது
x
தினத்தந்தி 16 April 2021 9:03 PM IST (Updated: 16 April 2021 9:03 PM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே, நள்ளிரவில் வீட்டின் தகவை தட்டிய வாலிபரை அரிவாளால் வெட்டிய சிறுவன் கைது.

பொறையாறு, 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கீழ்மாத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 28). இவர், சம்பவத்தன்று நள்ளிரவு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் எழுந்து வந்து எங்கள் வீட்டின் கதவை ஏன் தட்டுகிறாய்? என கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து இளவரசனை சரமாரியாக வெட்டியுள்ளார்். இதில் பலத்த காயம் அடைந்த இளவரசன் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இளவரசனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து இளவரசன் கொடுத்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

Next Story