வீரக்குமாரசாமி கோவில் உண்டியலில் ரூ.11¼ லட்சம் காணிக்கை


வீரக்குமாரசாமி கோவில் உண்டியலில் ரூ.11¼ லட்சம் காணிக்கை
x
தினத்தந்தி 16 April 2021 5:55 PM GMT (Updated: 16 April 2021 5:55 PM GMT)

வீரக்குமாரசாமி கோவில் உண்டியலில் ரூ.11 லட்சம் காணிக்கை

வெள்ளகோவில்
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் உண்டியல் திறப்பு நேற்று அறநிலையத்துறை திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது.இதில் ரூ.11 லட்சத்து 27 ஆயிரத்து 677 ம். தங்கம் 48 கிராம், வெள்ளி 149 கிராம் இருந்தது. இந்த கோவிலில் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி திறக்கப்பட்டது. 
அதேபோல் வள்ளியரச்சல் அழகு நாச்சியம்மன் கோவில் நேற்று உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில் ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 618-ம்,தங்கம் 54 கிராமும், வெள்ளி 19 கிராமும் இருந்தது. இந்த கோவிலில் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி திறக்கப்பட்டது, உண்டியல் திறப்பின்போது அறநிலையத்துறையின் காங்கேயம் ஆய்வாளர் அபிநயா, வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் ரத்தினம்பாள் மற்றும் கோவில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Next Story