கொரோனா காலகட்டத்தில் உரிய கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்று மடத்துக்குளம் தாசில்தாரிடம் கிராமிய இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளுடன் வந்து மனு கொடுத்துள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் உரிய கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்று மடத்துக்குளம் தாசில்தாரிடம் கிராமிய இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளுடன் வந்து மனு கொடுத்துள்ளனர்.
x
தினத்தந்தி 16 April 2021 6:13 PM GMT (Updated: 16 April 2021 6:13 PM GMT)

கொரோனா காலகட்டத்தில் உரிய கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்று மடத்துக்குளம் தாசில்தாரிடம் கிராமிய இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளுடன் வந்து மனு கொடுத்துள்ளனர்.

மடத்துக்குளம்
கொரோனா காலகட்டத்தில் உரிய கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்று மடத்துக்குளம் தாசில்தாரிடம் கிராமிய இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளுடன் வந்து மனு கொடுத்துள்ளனர்.
தாசில்தாரிடம் கோரிக்கை மனு
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் பல்வேறு கிராம கலைநிகழ்ச்சிகளில், இப்பகுதியில் உள்ள, கிராமிய கலைஞர்கள் பங்கேற்று பயனடையும் வகையில், கொரோனா காலகட்ட தளர்வுகள் வேண்டும் தமிழக நாட்டுப்புற இசைப்பெரும் கலை மன்றம் சார்பில் மடத்துக்குளம் தாசில்தார் கனிமொழியிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளனர்.
 அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில், நாதஸ்வரம், தவில், பம்பை, தப்பாட்டம், உடுக்கை, போன்ற பல்வேறு கிராமிய கலைஞர்களாக இருக்கும், சுமார் 2 அயிரத்துக்கும் மேற்பட்ட கலைக்குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றன. மேலும் மடத்துக்குளம் பகுதியில் நடைபெறும் திருமண விழா, காதணி விழா, மற்றும் முக்கியமான கோவில் திருவிழாக்களில், எங்கள் கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் பெரும்பான்மையாக இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். 
கொரோனா 2-ம் அலை
மேலும் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று நோய் பரவியதால், எங்கள் கலைஞர்களின் வாழ்வாதாரம், பெரும் அவதிக்குள்ளானது. இதனால் மடத்துக்குளம் பகுதியில் வாழும் கிராமிய கலைஞர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் (2021) கொரோனா 2-ம் அலை வீச தொடங்கியுள்ள காரணத்தால், தமிழகம் முழுவதும் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து பல நிகழ்ச்சிகளையும் தடை செய்துள்ளது.
கட்டுப்பாடுகளுடன் அனுமதி
அதன்படி தற்போது சித்திரை மாதம் புத்தாண்டு தொடங்கியுள்ளது. இதனால் மடத்துக்குளம் பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள், நடைபெறும் காலம் இது. இவ்விழாவில் எங்கள் கிராமப்புற கலைஞர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் வாய்ப்பு கிடைக்கும் காலம் ஆகும். 
இந்த நாட்களில் எங்களுக்கு தடை விதித்தால், எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். எனவே மடத்துக்குளம் பகுதியில் திருவிழாக்கள், திருமணம், காதணி விழா, கோவில் திருவிழாக்கள், ஆகிய சிறுசிறு நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த, அரசு அனுமதி வழங்குமாறும், தற்போது அரசு விதிக்கும் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின்படி நடந்து கொள்வோம்.
நிவாரணம் வழங்க வேண்டும்
கோவில் திருவிழாக்களில், நமது பாரம்பரிய கரகாட்ட நிகழ்ச்சிகளுக்கு இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை அனுமதி வழங்க வேண்டும். மேலும் நலிவடைந்த கிராமப்புற கலைஞர்களுக்கு, அரசு போதிய நிவாரணம் வழங்கவும், நலவாரிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு கிராம நிர்வாக அதிகாரி மூலம், மடத்துக்குளம் பகுதியில் உள்ள கிராமப்புற கலைஞர்களை கணக்கெடுத்து, அதற்குண்டான நிவாரணம் வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 இந்த மனுவினை, கிராமிய கலைஞர்கள் தங்களது இசைக்கருவிகளுடன் வந்து வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story