பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்


பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 16 April 2021 6:32 PM GMT (Updated: 16 April 2021 6:32 PM GMT)

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

நொய்யல்
வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினிேயாகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில், மண்எண்ணெய் அடுப்பு எரியும்போது மண்எண்ணெயை நிரப்பக் கூடாது. மின்சார பொருட்கள், மின் இணைப்புகள் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் இருக்கக் கூடாது. குழந்தைகளை சமையல் அறையில் தனியாக விட்டு வெளியே வரக்கூடாது என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் இடப்பெற்று இருந்தன.


Next Story