திருமானூர் அருகே கூரை வீடு தீயில் எரிந்து நாசம்


திருமானூர் அருகே கூரை வீடு தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 16 April 2021 7:09 PM GMT (Updated: 16 April 2021 7:09 PM GMT)

திருமானூர் அருகே கூரை வீடு தீயில் எரிந்து நாசமடைந்தது.

கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பாளையப்பாடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் அய்யனார்(வயது 45). விவசாய கூலி தொழிலாளியான இவர் கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் இருந்த பிரிட்ஜில் தீ பிடித்து வீடு முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த  வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு அய்யனார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


Next Story