பெரம்பலூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம்


பெரம்பலூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 16 April 2021 7:15 PM GMT (Updated: 16 April 2021 7:15 PM GMT)

பெரம்பலூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி குன்னம் பகுதியில் வருகிற 24-ந் தேதி புதிதாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்க உத்தேசித்துள்ளதை கைவிட உயர்நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 9-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை வகித்தார். இதில் சங்க செயலாளர் சுந்தர்ராஜன் உள்பட திரளான வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.


Next Story