பிளஸ் -2 பொதுத்தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும்


பிளஸ் -2 பொதுத்தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 April 2021 7:43 PM GMT (Updated: 16 April 2021 7:43 PM GMT)

மாநிலம் முழுவதும் கொரோனாபரவல்அதிகரித்து வரும் நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும் என கல்வியாளர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.

விருதுநகர், 
மாநிலம் முழுவதும் கொரோனாபரவல்அதிகரித்து வரும் நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும் என கல்வியாளர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.
 பொதுத்தேர்வு 
தமிழக அரசு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை ரத்து செய்துவிட்ட நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மட்டும் நடைபெறும் என அறிவித்து அதற்கான செய்முறை தேர்வு வருகிற 23-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 பொதுத்தேர்வில் மே மாதம் 3-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மே 2-ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மொழிப்பாடத்தேர்வினை ரத்து செய்துவிட்டு இந்த தேர்வு மே 31-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வினையும் மே 22-ந் தேதியே தொடர்ச்சியாக நடத்தி முடிக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
 அதிகரிப்பு
 இந்தநிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. வடமாவட்டங்களில் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளது. 
விருதுநகர் மாவட்டத்திலும் இருவாரங்களில் 450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் பலியாகியுள்ளனர். ஆனாலும் மாவட்டம் முழுவதும் நோய்தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாத நிலையில் மருத்துவபரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்க ப்படாதநிலை உள்ளது. 
அவசியம் 
இந்நிலையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை ரத்து செய்துவிட்ட நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை தற்போது ஒத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்தநிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை ஒத்திவைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 ஆனால் இதுவரை அதுபற்றி எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் பிளஸ்-2 மாணவர்கள் தற்போது நேரடி வகுப்புகள் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களும் நோய் தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றி பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 ஆனாலும் பெற்றோர் இந்தநிலையில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அஞ்சும்நிலை உள்ளது.
எனவே பள்ளிக் கல்வித்துறை இவ்விஷயத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும்.
வலியுறுத்தல் 
இந்தநிலையில் தமிழக அரசு இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி பிளஸ்-2  தேர்வினை உடனடியாக ஒத்திவைப்பதாக அறிவிக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 மேலும் தற்போதுள்ள நிலையில் செய்முறை தேர்வும் ஒத்திவைக்கப்படுவதோடு மாணவர்களின் நேரடி வகுப்புக்களுக்கு பதில் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களை தவிர பிறவகுப்பு மாணவர்களையும் நேரடியாக பள்ளிக்கு வரவழைக்கும் நிலை இருந்து வருகிறது, இதனை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story