அய்யம்பேட்டையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை; போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
அய்யம்பேட்டையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அய்யம்பேட்டை:-
அய்யம்பேட்டையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
தஞ்சை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு சென்றார். அப்போது அவருக்கு அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த அம்மன்பேட்டையை சேர்ந்த முருகானந்தம் (வயது29) என்பவர் பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு போலீஸ்காரர் முருகானந்தம் அந்த பெண் போலீசை அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பெண் போலீசுக்கு போலீஸ்காரர் முருகானந்தம் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து அந்த பெண் போலீஸ் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகானந்தத்தை கைது செய்தனர். இந்த நிலையில் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், போலீஸ்காரர் முருகானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story