ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா


ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா
x
தினத்தந்தி 16 April 2021 8:07 PM GMT (Updated: 16 April 2021 8:07 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது. அதன்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 45 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதில்  750-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு  தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.


Next Story