முயல்வேட்டைக்கு சென்றபோது மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி - காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்


முயல்வேட்டைக்கு சென்றபோது மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி - காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 17 April 2021 10:19 AM IST (Updated: 17 April 2021 10:19 AM IST)
t-max-icont-min-icon

முயல்வேட்டைக்கு சென்றபோது மின் வேலியில் சிக்கி காஞ்சீபுரத்தை சேர்ந்த தொழிலாளி பலியானார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் விஷார் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 40). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் எம்.என்.பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பாபு, அவரது நண்பர்கள் திருமலை, ரமேஷ், சுரேஷ் ஆகிய 4 பேரும் விளாப்பாக்கம் பகுதியில் முயல் வேட்டைக்காக சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வேர்க்கடலை பயிரை பன்றி மற்றும் எலிகள் நாசப்படுத்தி வருவதால் மச்சேந்திரன் (52) என்பவர் தனது தோட்டத்தில் மின்வேலி அமைத்துள்ளார். இதனை கவனிக்காத பாபு மின்வேலியில் சிக்கி உள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மச்சேந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story