காஞ்சீபுரத்தில் 7 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை - கொரோனா தொற்றால் நடவடிக்கை


காஞ்சீபுரத்தில் 7 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை - கொரோனா தொற்றால் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 April 2021 10:24 AM IST (Updated: 17 April 2021 10:24 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று நடவடிக்கையாக 7 கோவில்களில் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

காஞ்சீபுரம்,

மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சீபுரம் நகரில் கைலாசநாதர், சுரகேசுவரர், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர், முத்தீஸ்வரர், மதங்கீசுவரர் என 6 சிவாலயங்களும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைகுண்ட பெருமாள் கோவில் உள்பட 7 கோவில்கள் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை மூடியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

கோவிலுக்குள் சாமிக்கு நடைபெறும் பூஜைகள் மட்டும் வழக்கம் போல நடைபெறுகிறது.
1 More update

Next Story