காஞ்சீபுரம் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - அதிகாரி தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 17 April 2021 10:28 AM IST (Updated: 17 April 2021 10:28 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம்,

நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 9 பேருக்கு சுகாதாரத்துறையினர் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி உள்பட 4 அரசு ஆஸ்பத்திரிகள், 28 ஆரம்ப சுகாதார நிலைங்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரத்தில் பட்டு சேலை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1,659 தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story