கிணறு தூர்வாரும் பணி


கிணறு தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 19 April 2021 10:38 AM GMT (Updated: 2021-04-19T16:08:52+05:30)

உடுமலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்றுவதற்காக கிணறுகளை தூர்வாரும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தளி
உடுமலை பகுதியில்  சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்றுவதற்காக கிணறுகளை தூர்வாரும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாகுபடி
உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை, வாழை கரும்பு நெல் சப்போட்டா மா போன்ற பயிர்களும் கத்தரி வெண்டை அவரை பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் கீரை வகைகளும் தானியங்களும் சாகுபடி செய்யப்படுகிறது. 
தற்போதைய சூழலில் சாகுபடி பணிகளுக்கு கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் பெரிதும் உதவி புரிந்து வருகின்றன. ஆனால் கோடை வெப்பத்தால் அணைகளுக்கு வந்து கொண்டுள்ள தண்ணீர் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டாலும் பற்றாக்குறையே நிலவி வருகிறது. அதைத்தொடர்ந்து கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை வைத்து சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தூர்வாருதல்
 இந்த நிலையில் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. அதைத்தொடர்ந்து புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் அவற்றில் எதிர்பார்த்த அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதையடுத்து ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள கிணறுகளை தூர்வாரும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


----
கிணறு தூர்வாரப்பட்டுள்ள கிணறு.

Next Story