உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி ஓட்டல் தொழிலாளி பலி


உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி ஓட்டல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 April 2021 4:18 PM IST (Updated: 19 April 2021 4:18 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி ஓட்டல் தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவரது மகன் சூசை நாதன் (வயது 60). இவர் செங்கல்பட்டில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றவர் கட்டியாம்பந்தல் கூட்ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
1 More update

Next Story