மது விருந்தில் ரகளை; 6 பேர் கைது


மது விருந்தில் ரகளை; 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2021 4:30 PM IST (Updated: 19 April 2021 4:30 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பழைய ரெயில்வே ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கொரோனா விதிமுறைகளை மீறி நள்ளிரவில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடி மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது அந்த ஓட்டலில் 2 அறைகளில் தங்கி மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சின்ன காஞ்சீபுரம் அம்மாங்கார தெருவை சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்யும் ராஜேஷ் (32) என்பவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்தது தெரிந்தது.

ரகளையில் ஈடுபட்டதாக ராஜேஷ், ஏனாத்தூர் கமல் (27), கோனேரிக்குப்பத்தை சேர்ந்த காமேஷ் (24), முருகன் (37), டேவிட் (25), சென்னை திருவேற்றியூரை சேர்ந்த அருண் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
1 More update

Next Story