ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை


தற்கொலை
x
தற்கொலை
தினத்தந்தி 19 April 2021 4:07 PM GMT (Updated: 2021-04-19T21:37:21+05:30)

ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை

கோவை

பங்குச்சந்தை வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால், அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் காதல்ஜோடி ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சோக சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது:-


கோவை இருகூர் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் மற்றும் வாலிபர் ஆகியோர் தலை துண்டாகி பிணமாக கிடந்தனர். 

இது குறித்த தகவலின் பேரில் போத்தனூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

அவர்கள், அங்கு ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர் உடல் சிதறி பிணமாக கிடந்தனர். கிடந்தது. அந்த உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கோவை தொப்பம்பட் டியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் பிரவீன்குமார் (வயது 31), வடவள்ளியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் ஸ்ரீவித்யா (31) என்பதும்,பிரவீன்குமார், ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது, அதே கல்லூரியில் படித்த ஸ்ரீவித்யாவை காதலித்து வந்ததும், அவர்கள் இருவரும் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட தும் தெரியவந்தது.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:-


தற்கொலை செய்துகொண்ட பிரவீன்குமாரின் சட்டைப்பையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், தங்களின் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. போலீசார் எங்களை மன்னித்து விடவேண்டும் என்று எழுதி இருந்தது. கல்லூரி படிப்பை முடித்த பிறகு பிரவீன்குமாரும், ஸ்ரீவித்யாவும் சேர்ந்து சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்து ஷேர் டிரேடிங்கில் ஈடுபட்டனர்.

 ஆரம்பத்தில் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.
இதனால் அவர்கள், தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நீங்களும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யுங்கள். 

ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.3 ஆயிரம் தருவதாக கூறி உள்ளனர். இதை நம்பி அவர்களிடம் ஏராளமானோர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே, அவர்களின் 12 ஆண்டு காதலை அறிந்த இருவீட்டாரும் பிரவீன் குமாருக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் அடுத்த மாதம் (மே) திருமணம் செய்து வைக்க சம்மதித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்ததில் அவர்கள் பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பணம் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களால் பணத்தை சரிவர திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர்.

பணம் கொடுத்தவர்களும் தொடர்ந்து போன் செய்து பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். இதனால் இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தனர். இதையடுத்து கடந்த 12-ந் தேதி அவர்கள் 2 பேரும் தங்களின் வீட்டில் இருந்து மாயமானார்கள்.


திருமணம் ஏற்பாடு நடைபெற்று வந்ததால் காதல் ஜோடியை பெற்றோர் தேடி வந்தனர். மேலும் ஸ்ரீவித்யாவை காணவில்லை என்று வடவள்ளி போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். 

கடந்த ஒரு வாரமாக அவர், எங்கு உள்ளார் என்பது தெரியாத நிலையில் நேற்று கோவை இருகூர் ரெயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பங்குச்சந்தை வர்த்தகத்தில் பணத்தை இழந்த காதல் ஜோடி தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story