ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 April 2021 4:30 PM GMT (Updated: 2021-04-19T22:00:22+05:30)

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

43 பேருக்கு கொரோனா 

பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியை சேர்ந்த 43 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் மகாலட்சுமி நகர், மார்க்கெட் ரோடு, ராமகிருஷ்ணாபுரம் வீதி,பி.கே.எஸ். காலனி, சேதுபதி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

கிருமி நாசினி தெளிப்பு 

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் சீனிவாசபுரம், பனமரத்துபாளையம், ஊஞ்சவேலாம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் நெகமம், குள்ளி செட்டிபாளையம், கொல்லப்பட்டி, சேரன் நகர், ஜமீன்முத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 9 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் கபசுர குடிநீர் மற்றும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. 

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் ஒரே நாளில் 43 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.

சளி மாதிரி சேகரிப்பு 

கோவை கணபதியை சேர்ந்த 52 வயதானவர் தனது உறவினரான வால்பாறை அருகே உள்ள தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வீட்டிற்கு வந்தார். அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து எஸ்டேட் பகுதியை சேர்ந்த 14 தொழிலாளர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.


Next Story