தர்மபுரி மாவட்டத்தில் 146 பேருக்கு கொரோனா தொற்று


தர்மபுரி மாவட்டத்தில்  146 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 19 April 2021 5:01 PM GMT (Updated: 2021-04-19T22:31:05+05:30)

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே நேற்று ஒரே நாளில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 146 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா 2-வது அலையில் தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தர்மபுரி மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு திரும்பினர்
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று அரசு மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இருந்து மொத்தம் 87 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மொத்தம் 746 பேர் கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story