கொரோனா கட்டுப்பாடுகள் அமல் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் இன்று முதல் மூடல்


கொரோனா கட்டுப்பாடுகள் அமல் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் இன்று முதல் மூடல்
x
தினத்தந்தி 19 April 2021 5:16 PM GMT (Updated: 2021-04-19T22:46:08+05:30)

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் இன்று முதல் மூடப்பட்டது.

வேதாரண்யம்:-
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வங்க கடலும், பாக் ஜலசந்தி கடலும் கூடும் பகுதியான நிலப்பகுதியில் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், முயல், குரங்கு போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் இன்று முதல் மூடப்படுவதாகவும், பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் நாகை மாவட்ட வனத்துறை அதிகாரி கலாநிதி, கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் ஆகியோர் அறிவித்துள்ளனர். 

Next Story