குமரி சர்வோதயா சங்க முன்னாள் மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்


குமரி சர்வோதயா சங்க முன்னாள் மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 19 April 2021 6:33 PM GMT (Updated: 19 April 2021 6:33 PM GMT)

சா்வோதயா சங்கத்தில் போலி ரசீது தயாரித்து ரூ.90 ஆயிரம் மோசடி செய்த சர்வோதய சங்க முன்னாள் மேலாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாகர்கோவில், 
சா்வோதயா சங்கத்தில் போலி ரசீது தயாரித்து ரூ.90 ஆயிரம் மோசடி செய்த சர்வோதய சங்க முன்னாள் மேலாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சர்வோதய சங்க மேலாளர்
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு மடத்துவிளையை சேர்ந்தவர் ராமேஸ்வரன் (வயது 68). இவர் கடந்த 2000 முதல் 2003-ம் ஆண்டு வரை கண்ணுமாமூட்டில் உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்யும் சர்வோதய சங்க கிளை மேலாளராக பணியாற்றினர். அப்போது, துணி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பணத்துக்கு போலி ரசீது தயாரித்து ரூ.90 ஆயிரத்து 209 மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த மோசடி குறித்து அப்போதைய சங்க செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
6 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு 2005-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டா் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டின் நேற்று தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பில், ராமேஸ்வரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.17,500 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் யாசின் முபாரக் அலி ஆஜரானார்.

Next Story