ஒலி, ஒளி அமைப்பாளர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


ஒலி, ஒளி அமைப்பாளர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 19 April 2021 6:39 PM GMT (Updated: 2021-04-20T00:09:08+05:30)

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படுவதை தடுக்க அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என ஒலி, ஒளி அமைப்பாளர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி முறை நடைமுறையில் உள்ளதால் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் அங்கு வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டியில் குறைகள் அடங்கிய மனுக்களை போடும் வகையில் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. 
அரசு நிதி உதவி வழங்க வேண்டும்
இதனையடுத்து நேற்று கரூர் மாவட்ட ஒலி, ஒளி அமைப்பாளர்கள், வாடகை பாத்திரக்கடை, டெக்கரேட்டர், மேடை, பந்தல், ஜெனரேட்டர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து பெட்டியில மனு போட்டனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாங்கள் சுமார் 250 ேபர் கரூர் மாவட்டத்தில் இச்சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறோம். தற்போது ஊரடங்கு சட்டத்தால் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு நலிவடைந்து உள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கு சட்டத்தால் நாங்கள் எங்கள் சங்கத்தின் சார்பாக கலெக்டர் கவனத்திற்கு மனு கொடுத்தும் அரசு மூலம் எங்களுக்கு எந்த ஒரு சலுகையோ? நிதி உதவியோ? இன்னும் வழங்கப்பட வில்லை. 
சிறு விேஷசங்களுக்கு மேற்கண்ட பொருட்கள் வாடகைக்கு கொடுத்து நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு சட்டத்தால் நாங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டு வாழ்தாரத்தை இழந்து தவிக்கிறோம். எனவே எங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு மூலம் நிதி உதவி வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.
திருவிழாக்கள் நடத்த அனுமதி
இதேபோல், தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் வந்தவர்கள் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், ஸ்டேஜ் டெக்கரேஷன், மணவறை அமைப்பாளர்கள், ஒலி, ஒளி உள்ளிட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இதனால் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் 50 சதவீத நபர்களுடன்  திருமணம், திருவிழாக்கள், கோவில், சர்ச், மசூதி உள்ளிட்ட அனைத்து மதம் சார்ந்த சமூக நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிறுவனம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Next Story