பிளஸ்-2 செய்முறை தேர்வினை இணை இயக்குனர் ஆய்வு


பிளஸ்-2 செய்முறை தேர்வினை இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 19 April 2021 6:43 PM GMT (Updated: 19 April 2021 6:43 PM GMT)

பிளஸ்-2 செய்முறை தேர்வினை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை, ஏப்.20-
பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வானது கடந்த  16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 2 கட்டமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பிளஸ்-2 செய்முறை தேர்வினை பார்வையிட கண்காணிப்பு அலுவலராக நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் வாசு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டையில் உள்ள இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராணியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கந்தர்வக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடைபெற்று வந்த பிளஸ்-2 செய்முறை தேர்வினை ஆய்வு செய்தார். அதன்பின் நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் வாசு நிருபர்களிடம் கூறுகையில், "பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு கூடங்கள் செய்முறை தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்த பின்பும், கிருமி நாசினிகொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிளஸ்-2 செய்முறை தேர்வு மாணவர்கள் சமூக இடைவெளிவிட்டு அமரச் செய்ய வேண்டும். மாணவர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். அனைத்து மாணவர்களும், ஊழியர்களும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும்" என்றார். ஆய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உடன் இருந்தார்.

Next Story