மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2021 7:07 PM GMT (Updated: 2021-04-20T00:37:36+05:30)

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி, ஏப்.20-
மாரனேரி சப் இன்ஸ்பெக்டர் வேல்சாமி துலுக்கப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி  என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் திருத்தங்கல்லில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மது விற்ற பணத்தை பறிமுதல் செய்தனர். எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமிழங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மது விற்ற டி.கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story