உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் உடல் தகனம்


உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் உடல் தகனம்
x
தினத்தந்தி 19 April 2021 7:09 PM GMT (Updated: 2021-04-20T00:39:08+05:30)

உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

குளித்தலை
உடல் தகனம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வலையப்பட்டியைச் சேர்ந்தவர் அ.பாப்பாசுந்தரம் (வயது 87). முன்னாள் அமைச்சரான இவர். அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தார். இறுதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதையடுத்து பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வலையப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் வலையப்பட்டியில் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. 
முன்னதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பாப்பாசுந்தரத்தின் உடலுக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாப்பாசுந்தரத்தின் மூத்த மகன் எஸ்.கருணாகரன் (அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர்) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.  
பங்கேற்றவர்கள்
இறுதி ஊர்வலம் மற்றும் இறுதி சடங்கில் கரூர் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. ம.கீதா, டாக்டர் ஆர்.குணசேகரன், குளித்தலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளருமான என்.ஆர்.சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், கரூர் ஆவின் தலைவர் எம்.எஸ். மணி என்கிற எம்.சுப்பிரமணியன், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் பி.ரெங்கசாமி, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் க.இளங்குமரன், தோகைமலை ஒன்றிய குழுத்தலைவர் லதா ரங்கசாமி, நெய்தலூர் கூட்டுறவு சங்கத்தலைவர் வி.வெங்கடாசலம், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் வி.திருப்பதி, குளித்தலை ஒன்றிய குழு துணை தலைவர் எம்‌.இளங்கோவன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கவிதா கோவிந்தராஜன் உள்பட முன்னாள் எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பஞ்சாயத்து தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். பாப்பாசுந்தரத்தின் உடலுக்கு அவரது இளையமகன் எஸ்.கல்யாணகுமார் இறுதி சடங்கு காரியங்களை செய்தார்.

Next Story