பூசாரிகள் முன்னேற்ற சங்க ஒன்றிய கூட்டம்


பூசாரிகள் முன்னேற்ற சங்க ஒன்றிய கூட்டம்
x
தினத்தந்தி 19 April 2021 7:29 PM GMT (Updated: 2021-04-20T00:59:34+05:30)

பூசாரிகள் முன்னேற்ற சங்க ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரத்தில் நேற்று பூசாரிகள் முன்னேற்ற சங்க ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொது செயலாளர் சதீஸ்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கிராம கோவில் நலவாரிய அட்டையை நடைமுறைப்படுத்தியும், புதிய நலவாரிய அட்டையை புதுப்பித்து தர வேண்டும். கொரோனா  காலங்களில் அரசு நடைமுறைப்படுத்திய கட்டுப்பாடுகளுக்கு கோவில் பூசாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். கொரேனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த 2 மாதங்களில் வரும் கோவில் திருவிழாக்களை அரசு நடைமுறைப்படுத்தும் கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஒன்றிய செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story