திருப்பூர் கே.வி.ஆர். நகரில் மின்கம்பத்தில் மினிபஸ் மோதி விபத்து

திருப்பூர் கே.வி.ஆர். நகரில் மின்கம்பத்தில் மினிபஸ் மோதி விபத்து
வீரபாண்டி
திருப்பூர் மங்கலம் சாலை செல்லம் நகர் பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு செல்லம் நகர் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் தனியார் மினி பஸ் கே.வி.ஆர்.நகர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் வளைவு பகுதியில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மின்கம்பத்தில் சிக்கிய மினி பஸ்சை அப்புறப்படுத்திட அப்பகுதி மக்கள் முயற்சித்தனர். இந்த விபத்தில் இரும்பு மின் கம்பம் வளைந்து தீப்பொறி பறந்தது. உடனடியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மின்சாரத்தை தடை செய்து மின்சார வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் சிக்கிய மினி பஸ்சை மீட்டு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணித்த பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற் படவில்லை.அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் விபத்து நடந்த இடத்தில் பேக்கரி கடை முன்பாக 2 சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் தான் விபத்து ஏற்பட்டது என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். மினி பஸ் மின்கம்பம் மீது மோதியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, சுமார் 1 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story