மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 April 2021 8:29 PM GMT (Updated: 2021-04-20T01:59:50+05:30)

மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கீழ கோவிந்த புத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்ரீபுரந்தான் நோக்கி சென்ற 3 மாட்டு வண்டிகளை போலீசார் மறித்து, அவற்றில் சோதனை செய்ய முயன்றனர். போலீசாரை கண்டவுடன் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 3 பேர், சாலையின் ஓரத்தில் மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து போலீசார், மாட்டு வண்டிகளை சோதனை செய்தபோது கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story