கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி


கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 April 2021 9:05 PM GMT (Updated: 2021-04-20T02:35:45+05:30)

கிணற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

திருமங்கலம், ஏப்.20-
மதுரை சமயநல்லூர் அருகே உள்ள பரவையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி தனது குழந்தைகளுடன் ஒத்தக்கடையில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். 
இந்தநிலையில் சம்பவத்தன்று ரமேஷ், அவரது தந்தை தவமணி, நண்பர் அன்புவேல்பாண்டியன் ஆகியோர் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே உள்ள நொண்டி கருப்பசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். 
அப்போது கோவில் பின்புறம் உள்ள கிணற்றில் ரமேஷ் குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினார். அங்கிருந்து அவர் வெளியேற முடியவில்லை. இதனால் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். 
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story