அந்தியூர் அருகே மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமரா


அந்தியூர் அருகே  மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமரா
x
தினத்தந்தி 19 April 2021 9:21 PM GMT (Updated: 2021-04-20T02:51:05+05:30)

அந்தியூர் அருகே மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி வனத்துறையினர் கேமரா அமைத்தனர்.

அந்தியூர் அருகே பருவாச்சி காந்திநகர் பகுதியில் மர்ம விலங்குகள் கடித்து 3 ஆடுகள் இறந்தன. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பருவாச்சி காந்தி நகர் மற்றும்  துருசனாம்பாளையம், நல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் மர்ம விலங்கு கடித்து 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துவிட்டன. இதைத்ெதாடர்ந்து ஆடுகளை கடித்து கொல்லும் மர்ம விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர்  முடிவு செய்தனர். இதையடுத்து காந்தி நகர் பகுதியில் மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் நவீன தானியங்கி கேமராக்களை பொருத்தினர். மேலும் காந்தி நகர் பகுதியில் இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
------

Next Story