கோபி அருகே ரோட்டின் குறுக்கே குழாய்களை போட்டு பொதுமக்கள் போராட்டம்


கோபி அருகே ரோட்டின் குறுக்கே குழாய்களை போட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2021 9:28 PM GMT (Updated: 2021-04-20T02:58:51+05:30)

கோபி அருகே ரோட்டின் குறுக்கே குழாய்களை போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கோபி அருகே உள்ள பூதிமடைப்புதூர் ஊராட்சி பகுதியில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பூதிமடைப்புதூர் ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இந்த குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் ெபாதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சத்தியமங்கலம் - கொளப்பலூர் சாலையில் பூதிமடைப்புதூர் பிரிவில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டின் குறுக்கே குழாய்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நம்பியூர் போலீசார், கோபி வருவாய்த்துறையினர் அங்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதற்கு அதிகாரிகள் கூறும்போது, ‘பழுதடைந்த குழாய்கள் விரைவில் சரி செய்யப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர். அதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சத்தியமங்கலம் - கொளப்பலூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story