பாளையங்கோட்டையில் பஸ் பயணிகளுக்கு முககவசம்


பாளையங்கோட்டையில் பஸ் பயணிகளுக்கு முககவசம்
x
தினத்தந்தி 19 April 2021 9:29 PM GMT (Updated: 2021-04-20T02:59:08+05:30)

பாளையங்கோட்டையில் பஸ் பயணிகளுக்கு போக்குவரத்து போலீசார் முககவசம் வழங்கினர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பொதுமக்கள் முககவசம் அணிய வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு முககவசம் அணியாதவர்கள் மீது போலீசார் மற்றும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் நேற்று சாலைகளில் முககவசம் அணியாமல் நடந்து சென்றவர்கள், வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுதவிர வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பஸ்சுக்குள் முககவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இலவசமாக முககவசங்களும் வழங்கினர்.

Next Story