திசையன்விளையில் முககவசம், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம்


திசையன்விளையில் முககவசம், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 19 April 2021 9:43 PM GMT (Updated: 2021-04-20T03:13:29+05:30)

திசையன்விளையில் முககவசம், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திசையன்விளை:
திசையன்விளை போலீசார் நேற்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 30 பேரிடம் அபராதமாக தலா ரூ.200 வசூலித்தனர். திசையன்விளை நகரப்பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் எட்வின், முககவசம் அணியாத 11 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தார். இதேபோல் உவரி போலீசார் முக கவசம் அணியாத 49 பேரிடம் அபராதமாக தலா ரூ.200 வசூலித்தனர்.

திசையன்விளை தாசில்தார் ரகுமத்துல்லா, சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சுப்புராயலு, வருவாய் ஆய்வாளர்கள் துரைசாமி (திசையன்விளை), செல்வி (விஜயநாராயணம்) ஆகியோர் திசையன்விளையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காத மளிகைக்கடை, இனிப்பு கடை, நகைக்கடை, டீக்கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதமும், முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதமாக ரூ.37 ஆயிரம் வசூலித்தனர்.

Next Story