புளியங்குடியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


புளியங்குடியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2021 10:35 PM GMT (Updated: 2021-04-20T04:05:56+05:30)

புளியங்குடியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புளியங்குடி:
புளியங்குடியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். புளியங்குடி கிளையில் அனைத்து சங்க கூட்டமைப்பின் முடிவின்படி போக்குவரத்து கழக ஊழியர்கள் வார விடுமுறை எடுப்பதை நிர்வாகம் தன்னிச்சையாக மாற்றியதையும், சிறப்பு விடுப்பு மற்றும் சம்பளம் மாதத்தின் இறுதி நாளில் வழங்கப்படாததையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. கிளை செயலாளர் பூவையா தலைமை தாங்கினார். தொ.மு.ச. நிர்வாகிகள் ஷார்ப் கணேசன், சுப்பையா, ராஜாஜி, அமுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வசந்தம் சுப்பையா வரவேற்றார். மாடசாமி சுப்பிரமணியன், அந்தோணி, குமார், சுரேஷ் உலகராஜ், முத்துக்கிருஷ்ணகுமார், சிதம்பரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இறுதியில் கிளை பொருளாளர் மாடசாமி நன்றி கூறினார்.

Next Story